Posts

பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நூல்

Image
பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்னும் நூல்: (முனைவர் தி.நெடுஞ்செழியன்) இந்நூல் பெரியார் பற்றிய பல உண்மை கருத்துக்களை கூறியுள்ளது.சமூகநீதியற்ற பிரச்சினைகளைத் தீர்த்து சமூகநீதியை நிலைநாட்ட இந்த சமூகத்தில் பல தலைவர்கள் போராடினார்கள்.அதில் ஒரு மாபெரும் புரட்சியைச் செய்தவர் தான் தந்தை பெரியார்.சாதி, மதம், மொழி, இனம்,பெண் விடுதலை அனைத்திற்கும் பகுத்தறிவின் மூலம் சமூகநீதியைப் பெற்று தந்தார்.ஆனால் இன்றைக்கு அவர் மீது தமிழ்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றும்,கீழ் வெண்மணி அவதூறு, மதத்தை அவமதிக்கிறார் இப்படி பல விமர்சனங்கள் எதிரி கூட்டங்கள் திட்டமிட்டே பொய்யான தகவல்களைப் பரப்பி கொண்டிருக்கிறது.அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளியாக உண்மையை இந்த நூல் கூறுகிறது.புராண கதைகள்,இதிகாசங்களை அறவே பொய் என்று மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஏன் என்று இந்நூல் கூறுகிறது.தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி விட்டார் ஆனால் தமிழ் வளர்ச்சியடைய வேண்டும் என்பது தான் அவரின் நோக்கமாக இருந்தது அதனால் தான் அப்படி கூறினார் அதன் உண்மையையும் தமிழுக்காக அவர் செய்த தொண்டும் இந்த நூல் விவரிக்கிறது.அத...

ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையின் மூலம் சென்னை பயணம்

Image
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியில் தமிழ் உயராய்வு மையம் நடத்தும் பதினைந்து நாள்கள் ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையில் 26ஆளுமைகள் பயிற்சி அளித்தார்கள்.இதில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த  அனைவருக்கும் நன்றி.அதனைத் தொடர்ந்து சென்னைக்கு இரண்டு நாள்கள் அச்சு ஊடகத்தையும் காட்சி ஊடகத்தையும் நேரில் காண‌ அழைத்துச் சென்றார்கள். கல்லூரியிலிருந்து 08.10 2025 அன்று இரவு 10 மணிக்கு மேல் பயணம் தொடங்கி 09.10.2025 அன்று சென்னை சென்றடைந்தோம். இதில் முதலாவதாக பெரியார் திடலில் தி.க துணைச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாரைச் சந்தித்தோம்.அவர் மாணவர்களை அழைத்துச் சென்று பெரியாரின் வாழ்க்கை வரலாற்றினை விவரித்த பிறகு பெரியார் பயன்படுத்திய பொருட்களைப் பார்வையிட்டோம்.இதில் என் கருத்து என்னவென்றால் பெரியார் மீது இன்றளவும் விமர்சனங்கள் இருந்து கொண்டு தான்‌ இருக்கின்றது. ஆனால் விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் சமூக மாற்றத்திற்காக இறுதி வரைப் போராடியவர்.சாதி, மதம்,ஆண் பெண் வேறுபாடு, பார்ப்பனிய ஆதிக்கம்,  இந்த அடக்குமுறைகளை எல்லாம் தன் இறுதி வரைப் போராடி சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்.இதற்...

ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையின் நிறைவு விழா.

Image
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியில் பதினைந்து நாள்கள் ஊடகவியலாளர் பயிற்சி பட்டறை நடைபெற்றது.அதன் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மூத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் "சமூக விடுதலையும் தமிழ் ஊடகங்களும்"என்ற‌ தலைப்பில் சிறப்புரையாற்றினார்.முதன் முதலில் பாரதியார் ஆரம்பித்த"இந்தியா" என்ற பத்திரிகையில் கரும்பு தோட்டத்தில் வாழ கூடிய தமிழர்களின் வாழ்க்கைப் பற்றி பேசியது.தந்தைப் பெரியார் தொடங்கிய "விடுதலை"மற்றும் 1925குடியரசு என்ற பத்திரிகை சுயமரியாதை கொள்கையும் இறைமறுப்பு, சாதி ஒடுக்குமுறைக்காகவும்,மொழி பிரச்சனை போன்ற கருத்துக்களை மக்களிடம் தைரியமாக எடுத்துரைப்பதும் , அறிஞர் அண்ணா தொடங்கிய "திராவிட நாடு"என்ற பத்திரிக்கையும் அடித்தட்டு மக்களின் சமூக விடுதலைக்காக பேசப்பட்டது. திரு.வி.கல்யாணசுந்தரனார் ஆரம்பித்த பத்திரிகை மூலம் தான் தமிழுக்கு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.முத்தமிழ் அறிஞர் கலைஞர் "முரசொலி" போன்ற இதழ்களை தொடங்கினார்.பொதுவுடைமை கட்சியின் ஜீவானந்தம் "ஜனசக்தி"என்ற இதழை ...

பெண்ணின் கண்ணீரும் பேசிய சுவரும்....

........பெண் ஒருத்தி சமையலறையில் நின்று தினமும் அழுது கொண்டே இருந்தால் எதற்கு என்றால் தன்  கனவுகளையும் உணர்வையும் யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் போல அதனை நினைத்து தினமும் சமையலறையில் அழுது கொண்டே இருந்தாள். முதலில் அவள் அப்பாவிடம் தன்  கனவை கூறுகிறாள். அதற்கு அப்பா அது எல்லாம் நீ எதுவும் செய்ய வேண்டாம் உன் வேலை என்ன தினமும் சமைத்து எங்களுக்கு பரிமாறுவது தான் உன் விருப்பமாகவும் உன் ஆசையாகவும் அதுதான் இருக்க வேண்டும் என்றாராம். அம்மாவிடம் சொல்ல முடியாது ஏனென்றால் அவளும் அப்படித்தான் இருக்கிறார்.உடனே தன்  கணவரிடம் கூறுகிறாள் அவர் காது கொடுத்து கூட கேட்கவில்லை.  இப்படி தினமும் நடந்து கொண்டிருந்தது. சமையலறையில் அழுவது ஒரு நாள் திடீரென அதிகமாக  இருந்தது. சமையலறை சுவருக்கு முன் தன் தலையை அதன் மீது ஒட்டிக்கொண்ட அடித்து வேகமாக கத்தி அழுகிறாள் உடனே சுவரு பேசத் தொடங்கியது. எப்படி பேச தொடங்கியது என்றால் தோழி  உன் கனவு என்ன என்று கேட்டவுடன் அழுது கொண்டிருந்த கண்களில் சிறிது ஆனந்தம் கலந்த சிரிப்புடன் கண்ணீர் வந்ததாம்.அந்தப் பெண் சொல்கிறாள் என் கனவு என்னவென்றால்  ...

அண்ணாந்து பார் என்ற புத்தகம் என் பார்வையில்...

அண்ணாந்து பார்:         (என்: சொக்கன்)        அறிஞர் அண்ணா பற்றி எனக்கு தவறான புரிதல் இருந்தது.அண்ணா அப்படி என்ன செய்து விட்டார்.ஆனால் என் புரிதலை முற்றிலும் மாற்றியது இந்த புத்தகம். மிகவும் எளிமையான நடையிலும் படிக்கும் போது சோர்வு இல்லாமல் விறுவிறுப்பாக இருந்தது. அண்ணாவிடம் நான் பார்த்து வியந்தது தன் குருவான பெரியார் மீது மனஸ்தாபம் இருந்தாலும் அவரைப் பற்றி ஒரு மேடையிலும் கூட தவறாக அவரைப் பற்றி பேசவில்லை அவரின் குணம் எனக்கு பிடித்தது.அண்ணாவின் ஆட்சியில் மக்களுக்காகவே உழைத்தார் என்று 100 சதவிகிதம் சொல்ல முடியும்.எளிமையான தோற்றத்தை இறுதி வரையிலும் மாற்றவே இல்லை.ஹிந்தி ஒழிப்பு,தீவிர மதுவிலக்கு,கைக் ரிக்க்ஷா ஒழிப்பு, இப்படி என்னற்றவை.அவரின் எழுத்து பணியும் நான்‌பார்த்து வியந்தது.இதழ், சிறுகதை, நாடகம், திரைப்படம் வசனம்,இப்படி அனைத்து துறைகளிலும் தன் எழுத்தை நிலை நாட்டினார்.முக்கியமாக தன் உடன் உள்ளவர்களை வளர்த்து விடுவதில் அண்ணா போல் யாரும் இல்லை.அண்ணா மீது மதிப்பு கூடிவிட்டது.அண்ணாவின் ஆட்சி இரண்டு ஆண்டு தான் ‌இதில் இவ்வளவு செய்ய முடியுமா என்று ஆச்சரிப...

பெரியார் ஏன் இன்றும் பேசு பொருளாக இருக்கின்றார் ?

இன்றைக்கு நான்  முதுகலைத் தமிழ்  படிக்கிறேன். சங்ககாலத்தில் ஔவையார், நப்பசலையார், வெண்ணிக்குயத்தியார் என நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்பால் புலவர்கள் இருந்தார்களென தமிழ் இலக்கிய வரலாறு சொல்கின்றது. ஆனால் என் அப்பத்தாவும் அம்மாச்சியும் எருமைச் சாணி அள்ளிக்கொண்டிருந்தார்கள். இடைப்பட்ட காலம் என்னானது?  அப்பொழுது வேதங்களையும் பிராமணியத்தையும் ஏற்றுக்கொண்ட சில மன்னர்களின் ஆட்சியில் மக்கள்  அடிமையானார்கள்.  மனுதர்ம சாஸ்திரத்தையும் சாதியின் பெயரைச் சொல்லியும் கடவுளின் பெயரைச் சொல்லியும் பிராமணர்களின் அடக்கு முறையாலும் மக்களின் பகுத்தறிவை மழுங்கடித்து மனிதர்களை மேல் கீழ் என்று அடுக்கிவைத்து தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று கூறுபோட்ட கூட்டம் பெண்களையும் அடக்கி ஒடுக்கியது. மனுதர்ம சாஸ்திரத்தின்படி தலையில் பிறந்தவர்கள் தோளில், பிறந்தவர்கள், தொடையில் பிறந்தவர்கள், காலில் பிறந்தவர்கள் என்று பாகுபடுத்தி இதில் பெண்கள் கடவுளின்  படைப்பை இல்லை என்று கூறியதே யார் இவற்றை எதிர்த்துக் கேட்டார்கள்?  பெண்கள் எல்லாம் அடுப்பங்கரையிலேயே கிடக்க வேண்டும் ஆண் மகனுக்கு அடிமைப்...

சமூகத்தின் பார்வை

நம் நாட்டில் எத்தனையோ நிகழ்வுகள் மாறி உள்ளன. ஆனால் சில இடங்களில் இன்னும் மாற்றம் இல்லாமல் பல நிகழ்வுகள் உள்ளன. அதில் ஆண் பெண் வேறுபாடு, ஏழை பணக்காரன், இப்படி எண்ணற்ற நிகழ்வுகள் மாறாமல் அப்படியே நிகழ்கிறது. அதில் ஆண் பெண் பாகுபாட்டில் ஆண் பிள்ளை வீட்டிற்குத் தலைவனாகவும் பெண் பிள்ளையை அடுத்த வீட்டிற்கு வேலை செய்பவளாகவும் பார்க்கின்றார்கள். உரிமை என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமம் ஆனால் அதுவும் கிடைக்கவில்லை ஆணுக்கு ஒரு நியாயம் பெண் என்றால் இப்படித்தான் கிடக்க வேண்டும் என்பதும், மக்களின் பார்வை எப்பொழுது மாறப் போகிறதோ தெரியவில்லை? ஆண் உடலில் வலிமை என்றால் பெண் மன உறுதியின் வலிமையானவர் ஆணுக்கு நிகராக பெண் இருக்கின்றாள் தானே! பெண்ணுக்குப் பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த உடனயே சுதந்திரமாகத் திரிய வேண்டிய கால்களில் கால் விலங்கு போட்டுக் கட்டிப் போடுகிறார்கள். அவள் மனதில் இருக்கின்ற ஆசைகளையும் கனவுகளையும் ஒரு கடுகு அளவிற்குக் கூட பார்க்க மாட்டேங்கிறார்கள். புத்தகப் பையையும் கனவுகளையும் சுமக்க வேண்டிய வயதில் வயிற்றில் ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டு அவதிப்படுகிறார்கள். பணம் இருந்தால் அவர்களுக்க...