பெரியார் ஏன் இன்றும் பேசு பொருளாக இருக்கின்றார் ?
இன்றைக்கு நான் முதுகலைத் தமிழ் படிக்கிறேன். சங்ககாலத்தில் ஔவையார், நப்பசலையார், வெண்ணிக்குயத்தியார் என நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்பால் புலவர்கள் இருந்தார்களென தமிழ் இலக்கிய வரலாறு சொல்கின்றது. ஆனால் என் அப்பத்தாவும் அம்மாச்சியும் எருமைச் சாணி அள்ளிக்கொண்டிருந்தார்கள். இடைப்பட்ட காலம் என்னானது? அப்பொழுது வேதங்களையும் பிராமணியத்தையும் ஏற்றுக்கொண்ட சில மன்னர்களின் ஆட்சியில் மக்கள் அடிமையானார்கள். மனுதர்ம சாஸ்திரத்தையும் சாதியின் பெயரைச் சொல்லியும் கடவுளின் பெயரைச் சொல்லியும் பிராமணர்களின் அடக்கு முறையாலும் மக்களின் பகுத்தறிவை மழுங்கடித்து மனிதர்களை மேல் கீழ் என்று அடுக்கிவைத்து தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று கூறுபோட்ட கூட்டம் பெண்களையும் அடக்கி ஒடுக்கியது. மனுதர்ம சாஸ்திரத்தின்படி தலையில் பிறந்தவர்கள் தோளில், பிறந்தவர்கள், தொடையில் பிறந்தவர்கள், காலில் பிறந்தவர்கள் என்று பாகுபடுத்தி இதில் பெண்கள் கடவுளின் படைப்பை இல்லை என்று கூறியதே யார் இவற்றை எதிர்த்துக் கேட்டார்கள்? பெண்கள் எல்லாம் அடுப்பங்கரையிலேயே கிடக்க வேண்டும் ஆண் மகனுக்கு அடிமைப்...