பெரியார் ஏன் இன்றும் பேசு பொருளாக இருக்கின்றார் ?

இன்றைக்கு நான்  முதுகலைத் தமிழ்  படிக்கிறேன். சங்ககாலத்தில் ஔவையார், நப்பசலையார், வெண்ணிக்குயத்தியார் என நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்பால் புலவர்கள் இருந்தார்களென தமிழ் இலக்கிய வரலாறு சொல்கின்றது. ஆனால் என் அப்பத்தாவும் அம்மாச்சியும் எருமைச் சாணி அள்ளிக்கொண்டிருந்தார்கள். இடைப்பட்ட காலம் என்னானது?

 அப்பொழுது வேதங்களையும் பிராமணியத்தையும் ஏற்றுக்கொண்ட சில மன்னர்களின் ஆட்சியில் மக்கள்  அடிமையானார்கள்.  மனுதர்ம சாஸ்திரத்தையும் சாதியின் பெயரைச் சொல்லியும் கடவுளின் பெயரைச் சொல்லியும் பிராமணர்களின் அடக்கு முறையாலும் மக்களின் பகுத்தறிவை மழுங்கடித்து மனிதர்களை மேல் கீழ் என்று அடுக்கிவைத்து தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்று கூறுபோட்ட கூட்டம் பெண்களையும் அடக்கி ஒடுக்கியது. மனுதர்ம சாஸ்திரத்தின்படி தலையில் பிறந்தவர்கள் தோளில், பிறந்தவர்கள், தொடையில் பிறந்தவர்கள், காலில் பிறந்தவர்கள் என்று பாகுபடுத்தி இதில் பெண்கள் கடவுளின்  படைப்பை இல்லை என்று கூறியதே யார் இவற்றை எதிர்த்துக் கேட்டார்கள்?

 பெண்கள் எல்லாம் அடுப்பங்கரையிலேயே கிடக்க வேண்டும் ஆண் மகனுக்கு அடிமைப் பொருளாகவே பெண்களின் வாழ்வு இருந்ததே யார் அவர்களுக்காகப் பேசினார்கள்? 

அது மட்டும் இல்லாமல் பெண்களின் மார்பகங்களை மறைக்க மேலாடை அணியக் கூட உரிமை இல்லாமல் வாசலை விட்டு வெளியே வராமல் ஆண்களுக்குத் துணி துவைப்பதும் சமைத்துப் போடுவதும் என்று  ஒரு ஜடம் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்களே இவற்றை மாற்ற யார் குரல் கொடுத்தார்கள்?

அதற்கெல்லாம் விடையாக நிற்பவர்தான் பெரியார்.

அதனால்தான் பெரியார் இன்றளவும் பேசுபொருளாக இருக்கிறார்.

பெரியார் மீதான விமர்சனங்களும் அவதூறுகளும் புதிதல்ல, அவை அவர் வாழும்காலத்திலேயே தொடங்கியவைதான்.
அவரால் தங்கள் சுகபோக வாழ்வை இழந்தவர்களும் அவரைக் கொச்சைப்படுத்துவதால் சுகபோக வாழ்வை அனுபவிப்பவர்களுமே பெரியார்மீது சேற்றைப் பூசுகிறார்கள். 

அப்படி என்ன செய்துவிட்டார் பெரியார்.  இந்தக் கிழவன் செய்தது ஒன்றும் சாதாரண செயல் அல்ல! இந்த சமூகத்தில் மாபெரும் சரித்திரத்தை படைத்துள்ளார். தெருக்களில் நடக்க உரிமை இல்லாத மக்களின் வாழ்வை மாற்றும் விதமாக யாரும் கேள்வி கேட்காமல் இருந்தபோது ஒரு கிழவன் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டார் என்றால் அவர்தான் தந்தை பெரியார். அவர் இருந்த போதிலும் இன்று வரையிலும் பல விமர்சனங்களை சிலர் அவர் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக வைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஒரு சமூகத்தின் சமூக நீதிப் பாதையின்மீது சாக்கடையை சிலர் வீசிக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைக்குக் கருப்புச்சட்டைக் காரனைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் சிலர் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நினைத்தால் எனக்கு ஒரு பக்கம் நகைப்பாகவும் மற்றொரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கின்றது.தந்தை பெரியாரின் மீது இன்றைக்கு ஒரு மாபெரும் சர்ச்சையாக இருந்து வருவது 40 வயதில் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து விட்டார் என்று. திருமணம் செய்ததை மட்டும் சிலர் நம்பிக் கொண்டும் சிலர் தெரிந்துகொண்டு பேசுகின்றார்களே அதற்கு பின்னால் இருக்கின்ற காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லையா இல்லை தெரிந்தும் விமர்சிக்க வேண்டும் என்று அவர் மீது விமர்சனத்தை வைக்கின்றார்களா என்று எனக்குத் தெரியவில்லை. 1949 இல் ஒரு இளம் வயது பெண்ணைத் திருமணம் செய்துவிட்டார்.  அதற்குப் பின்னால் இருக்கும் காரணம் சிலர் அறியாமல் பேசுகிறதே சில கூட்டங்கள் 1949 இல் ஒரு பெண்ணைத் தத்தெடுக்கும் உரிமையும் தத்துப்போகும் உரிமையும் அன்றைக்கு இருந்த சிவில் சட்டத்தில் இடம் கிடையாது. தன்னுடைய சொத்தை அனுபவிக்கவும் பயன்படுத்திக் கொள்ளவும் வேறு வழி இல்லாமல் மணியம்மையைத் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அவர் தள்ளப்பட்டார்.தன் மீது விமர்சனங்கள் வரும் என்று அவர் நினைத்திருந்தால் இன்றைக்கு இந்தச் சமூகம் சுதந்திரப் பறவை போல் பறந்து இருக்க முடியாது. கூட்டுக்குள் தான் அடைப்பட்டுக் கிடந்திருக்கும்.

 இன்றளவிலும் மிகப்பெரும் சர்ச்சையாக இருப்பது தந்தை பெரியார் தமிழ் மொழியை அவமதித்துவிட்டார் தமிழ் மக்களை அவமதித்துவிட்டார் எங்களின் உன்னதமான தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார் என்று பலரும் கொந்தளிக்கிறார்கள். தந்தை பெரியார் பலரைப் போல் உள்ளே ஒன்றினை வைத்துக் கொண்டு வெளியில் வெள்ளைச் சட்டை  போடுகிறார்களே அதுபோல் கிடையாது. ஆனால் பெரியாரோ அப்படி யாருக்கும் அஞ்சாமல் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்தார். அப்படி மொழி பற்றியும் அவர் எதற்காக காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் யாரும் அறியாமல் பொய் பேசி உலவிக்கொண்டு இருக்கின்றார்கள் இந்த சமூகத்தில். பெரியார் அப்படி கூறியது தமிழ் மொழி மீது இருந்த அக்கறையால் தானே தவிர இழிவுபடுத்தும் நோக்கில் அல்ல. தமிழ் மொழி எந்த வளர்ச்சியும் அடையாமல் இருப்பதினால் தான் தமிழ் மொழிக்கு கட்டாயம் சீர்திருத்தம் வேண்டும் என்று வலியுறுத்தியவர் தந்தை பெரியார் தான். வெறும் வாய் வார்த்தையால் மட்டும் சொல்லாமல் வளர்ச்சி பெற 1925 மே மாதம் குடியரசு வார இதழைத் துவக்கி அதில் பல எழுத்துச் சீரமைப்புகளை அறிமுகப்படுத்தி தன் பணியைத் தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் 247 தமிழ் எழுத்துக்களுடன் 38 தேவையற்றவை. இந்த 38 எழுத்துக்கள் மூலம் நம்மால் பிழை இல்லாமல் பேசவும் படிக்கவும் முடியும். இவரால் ஏற்பட்ட புதிய முறை தான் னா,றா,ளா,ணை,லைளை,னை,ணொ,றொனொ,றோ,னோ, இப்படி 13  எழுத்துக்கள் குடி அரசு விடுதலை இதழ்களில் இருந்து உலகிற்குக் கிடைத்தன என்றால் தந்தை பெரியாரால் தான். இன்றைக்கு செம்மொழியாகத் திகழக்கூடிய தமிழ் மொழி மாபெரும் வளர்ச்சி பெறுவதற்கு வித்திட்டவர் தந்தை பெரியார். இவையெல்லாம் தெரியாது சில வானரக் கூட்டங்கள் புலம்பிக்கொண்டு இருக்கின்றன.1978 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் நூற்றாண்டு விழாவில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது.

 அது மட்டும் இல்லாமல் தன்னுடைய குடியரசு இதழ் நின்ற போது உடனே பகுத்தறிவு எனும் இதனை நடத்தினார். இந்த இதழில் தான் எழுத்து சீர்திருத்தத்தைப் பற்றி விளக்கப்பட்டு வந்தது.இன்றைக்கு ஒருவர் வரலாறு தெரியாமல் ஒரு அண்ணன் மேடையில் புலம்பிக் கொண்டிருக்கின்றார் பெண்களின் சுதந்திரத்திற்கும் மாபெரும் வளர்ச்சிக்கும் அவர் மட்டும்தான் காரணம் இது தெரியாமல் சிலர் ஏன் அவ்வையார் படிக்கவில்லையா காக்கை பாடினியார் படிக்கவில்லையா ஆண்டாள் படிக்கவில்லையா இப்படி கூறுகிறாரே நான் தெரியாமல் கேட்கிறேன் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒரு பெண் படிக்க முடிந்ததா கூலித் தொழிலாளியின் மகள் படிக்க முடிந்ததா இந்த சமூகத்தில் ஒரு சாதாரண செருப்பு தைப்பவனின் மகளோ கூலி தொழிலாளியின் மகளோ இன்றைக்கு சமமாக சம கல்வி பெற முடிகிறது என்றால் அதற்கு முதல் காரணம் தந்தை பெரியார். ஆம் எல்லோரும் போராடினார்கள் தான் ஆனால் பெரியார் மட்டும் தான் களத்தில் இறங்கி பெண் விடுதலையை சாத்தியமாக்கியது தந்தை பெரியார் ஒருவர் மட்டும்தான்.இப்படி இந்த சமூகத்திற்காகவும் சமூக நீதிக்கும் தன் வாழ்நாள் முழுதும் உழைத்தவர் பெரியார்.ஆனால் சில கூட்டங்கள் இவை எல்லாம் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் பெரியார் பற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றது இது இன்று மட்டும் நடக்கவில்லை அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்திலிருந்து நடந்து கொண்டு தான் இருந்தது. அவரின் கொள்கையை எதிர்த்த போது அது முடியவில்லை என்ற உடன் தனிமனித தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது. இன்றைக்கும் இந்தச் சமூகத்தில் சில கூட்டங்கள். இன்றைக்கு இந்தச் சமூகம் சாதி மதம் இல்லாமல் சமத்துவத்துடனும் சமகல்வி, பெண் விடுதலை, இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பு, வைக்கம் போராட்டம் இப்படி அனைத்திற்காகவும் போராடியதனால் தான் இந்தச் சமூகம் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால் இவையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் சில கூட்டங்கள் மக்களின் மனதில் பெரியார் மீது வெறுப்பினை வரவைக்கவே சில கூட்டங்கள் தந்திர வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. எந்தத் தந்திர வேலை செய்தாலும் யாராலும் எவராலும் எங்களின் பெரியாரை வீழ்த்தவே முடியாது அவர் எப்பொழுதும் எங்கள் மனதில் புரட்சியின் உருவமாய் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்.

யார் சொல்லி இருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் ஏன் நானே சொன்னாலும் உன் அறிவுக்கும் உன் புத்திக்கும் என்ன தோன்றுகிறதோ அதனை மட்டும் நம்பு.

Comments

Popular posts from this blog

ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையின் மூலம் சென்னை பயணம்

ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையின் நிறைவு விழா.

கண்ணீர்