ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையின் நிறைவு விழா.
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியில் பதினைந்து நாள்கள் ஊடகவியலாளர் பயிற்சி பட்டறை நடைபெற்றது.அதன் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மூத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் "சமூக விடுதலையும் தமிழ் ஊடகங்களும்"என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.முதன் முதலில் பாரதியார் ஆரம்பித்த"இந்தியா" என்ற பத்திரிகையில் கரும்பு தோட்டத்தில் வாழ கூடிய தமிழர்களின் வாழ்க்கைப் பற்றி பேசியது.தந்தைப் பெரியார் தொடங்கிய "விடுதலை"மற்றும் 1925குடியரசு என்ற பத்திரிகை சுயமரியாதை கொள்கையும் இறைமறுப்பு, சாதி ஒடுக்குமுறைக்காகவும்,மொழி பிரச்சனை போன்ற கருத்துக்களை மக்களிடம் தைரியமாக எடுத்துரைப்பதும் , அறிஞர் அண்ணா தொடங்கிய "திராவிட நாடு"என்ற பத்திரிக்கையும் அடித்தட்டு மக்களின் சமூக விடுதலைக்காக பேசப்பட்டது. திரு.வி.கல்யாணசுந்தரனார் ஆரம்பித்த பத்திரிகை மூலம் தான் தமிழுக்கு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.முத்தமிழ் அறிஞர் கலைஞர் "முரசொலி" போன்ற இதழ்களை தொடங்கினார்.பொதுவுடைமை கட்சியின் ஜீவானந்தம் "ஜனசக்தி"என்ற இதழை ...