பெண்மையை போற்றுவோம் கருத்தரங்கம் நிகழ்வு நடைபெற்றது.
கரந்தை தமிழ்ச்சங்கம்
பெண்மையை போற்றுவோம் கருத்தரங்கம் நிகழ்வு நடைபெற்றது.
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரியில் பெண்மையை போற்றுவோம் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக எத்திராஜ் மகளிர் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் அரங்கமல்லிகா அவர்களும் வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியின் உதவி பேராசிரியர் கவிஞர் ஆதிரா முல்லை அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முதல் நாள் கருத்தரங்கில் பெண்கள் ஆளுமைகளின் புகைப்படங்களை வைத்து கல்லூரியின் செயற்குழு உறுப்பினர் செந்தமிழ் செல்வன் அவர்கள் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார். மேலும் கல்லூரியின் முதல்வர் இரா. ராசாமணி அவர்களும் செயலர் சுந்தரவதனம் அவர்களும் தலைமை வகித்து மாணவர்களுக்கு ஊக்க உரையும் பெண்ணின் பெருமையையும் பற்றி உரையாற்றினார்கள். பெண்ணில்லா துறை உண்டோ? என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் அரங்கமல்லிகா அவர்களின் தலைமையில் கட்டுரை வாசிக்க பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்கள் சுதந்திரமாக உணர்வது மகளா? மனைவியா?தாயா? என்ற தலைப்பில் விவாத மேடை நடைபெற்றது. உதவி பேராசிரியர் மகேஸ்வரி நடுவராக விவாதம் நடைபெற்றது. இறுதியாக பெண் சாதனையாளர்கள் பற்றிய காட்சி வர்ணனையை உதவி பேராசிரியர்கள் கோடீஸ்வரி சுகன்யா அவர்கள் செய்து முதல் நாள் நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் கருத்தரங்கில் பெண்ணின் பயணம் சிகரமா சிரமமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் ஆதிரா முல்லை அவர்களின் தலைமையில் சிகரம் அணி தலைவராக உதவி பேராசிரியர் கிருத்திகா அவர்களும் சிரமம் அணி தலைவராக உதவி பேராசிரியர் எழிலரசன் அவர்களும் பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும் விட்டில் பூச்சிகள் அல்ல என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. அதில் உதவி பேராசிரியர் ஜெய்னம்பு பர்வின் அவர்களின் தலைமையில் பேசினார்கள். இன்னும் பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.நிறைவாக பயனைடந்த மாணவர்களுக்கும் பிற கல்லூரி மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறப்பு
ReplyDeleteமகிழ்ச்சி
ReplyDeleteஅருமை
ReplyDeleteசிறப்பு வாழ்த்துகள்
ReplyDelete