தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியில் தமிழ் உயராய்வு மையம் நடத்தும் பதினைந்து நாள்கள் ஊடகவியலாளர் பயிற்சி பட்டறையில் 26ஆளுமைகள் பயிற்சி அளித்தார்கள்.இதில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.அதனைத் தொடர்ந்து சென்னைக்கு இரண்டு நாள்கள் அச்சு ஊடகத்தையும் காட்சி ஊடகத்தையும் நேரில் காண அழைத்துச் சென்றார்கள். கல்லூரியிலிருந்து 08.10 2025 அன்று இரவு 10 மணிக்கு மேல் பயணம் தொடங்கி 09.10.2025 அன்று சென்னை சென்றடைந்தோம். இதில் முதலாவதாக பெரியார் திடலில் தி.க துணைச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாரைச் சந்தித்தோம்.அவர் மாணவர்களை அழைத்துச் சென்று பெரியாரின் வாழ்க்கை வரலாற்றினை விவரித்த பிறகு பெரியார் பயன்படுத்திய பொருட்களைப் பார்வையிட்டோம்.இதில் என் கருத்து என்னவென்றால் பெரியார் மீது இன்றளவும் விமர்சனங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் விமர்சனங்களைக் கண்டு அஞ்சாமல் சமூக மாற்றத்திற்காக இறுதி வரைப் போராடியவர்.சாதி, மதம்,ஆண் பெண் வேறுபாடு, பார்ப்பனிய ஆதிக்கம், இந்த அடக்குமுறைகளை எல்லாம் தன் இறுதி வரைப் போராடி சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர்.இதற்...
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியில் பதினைந்து நாள்கள் ஊடகவியலாளர் பயிற்சி பட்டறை நடைபெற்றது.அதன் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மூத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் "சமூக விடுதலையும் தமிழ் ஊடகங்களும்"என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.முதன் முதலில் பாரதியார் ஆரம்பித்த"இந்தியா" என்ற பத்திரிகையில் கரும்பு தோட்டத்தில் வாழ கூடிய தமிழர்களின் வாழ்க்கைப் பற்றி பேசியது.தந்தைப் பெரியார் தொடங்கிய "விடுதலை"மற்றும் 1925குடியரசு என்ற பத்திரிகை சுயமரியாதை கொள்கையும் இறைமறுப்பு, சாதி ஒடுக்குமுறைக்காகவும்,மொழி பிரச்சனை போன்ற கருத்துக்களை மக்களிடம் தைரியமாக எடுத்துரைப்பதும் , அறிஞர் அண்ணா தொடங்கிய "திராவிட நாடு"என்ற பத்திரிக்கையும் அடித்தட்டு மக்களின் சமூக விடுதலைக்காக பேசப்பட்டது. திரு.வி.கல்யாணசுந்தரனார் ஆரம்பித்த பத்திரிகை மூலம் தான் தமிழுக்கு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.முத்தமிழ் அறிஞர் கலைஞர் "முரசொலி" போன்ற இதழ்களை தொடங்கினார்.பொதுவுடைமை கட்சியின் ஜீவானந்தம் "ஜனசக்தி"என்ற இதழை ...
👌
ReplyDelete👏👏👏👏👏
ReplyDelete